Thursday, July 2, 2015

மோனம்

மோனம்




தனித்திருந்து
வெகுநேரம் அழு.


கண்ணீர் வழிந்து
கன்னம் வழியோடி
ஓரு குளமாய்
ஆன போதிலும் சரியே
.

உடற்கலங்கள் விம்ம
முதுகும் குலுங்கட்டும்
அல்லது
முன்னங் கைகளால
முழங்காலைக்கட்டிக் 
கொண்டாயினும்  சரியே


 கண்ணீர் ஓடி
 கடைவாயில் ஊறி
 உப்புச் சுவை
 உணரும் வரையும்
 அழு


 அழு (க்குகள்)
 கரையட்டும்.


11990




















No comments:

Post a Comment