Thursday, July 2, 2015

புத்தரின் பாராளுமன்றம்

புத்தரின் பாராளுமன்றம்


மாதுவிட்டுää மதுவிட்டு
சூதுவாது பேதம் விட்டு
காவியணிந்து போதிமாதவன்
பாதம் சரணமென ஆதி தேடி
அலைந்த அலுப்புத் தீர
அமர்;ந்துகொள்ளவோ
அன்றி

வெளிநாடு பலவுஞ் சென்று
களிநடமாடிடவோ
குளுகுளு இரதங்களேறி
கொழும்புவலம்
வந்திடச்சித்தமோ
ஓலைச் சுவடிகளில் பதிந்து
வேலைவாய்ப்புக்களள்ளி
வழங்கிமிக இன்புறவோ
அன்றிப்

போராடும் குழுக்களையும்
போராளிகளையும் வேரோடழித்து
தம்மினங் காக்கத்
திருமிகவுளம்  கொண்டோ

ஐயனே
கௌதமரின் பையனே
காவிதரித்து விசிறி தாங்கிப்
பாராளுமன்றம் புகுந்தீர்?
2000.
2000.



No comments:

Post a Comment