நாளைக்குப் பெருநாள்
வானப்பிறை
காதுச் சிமிக்கி அணிந்தது
குரோட்டன்கள்
மருதாணி அணிந்தன
வண்ணத்துப் பூச்சிகள்
வர்ணம் மாற்றின.
என் மகளும்
தாவணியில் புதிதாகத்
தைத்துக் கொண்டிருந்தாள்
பழைய
பொத்தல்களைத்தான்.
1990
வானப்பிறை
காதுச் சிமிக்கி அணிந்தது
குரோட்டன்கள்
மருதாணி அணிந்தன
வண்ணத்துப் பூச்சிகள்
வர்ணம் மாற்றின.
என் மகளும்
தாவணியில் புதிதாகத்
தைத்துக் கொண்டிருந்தாள்
பழைய
பொத்தல்களைத்தான்.
1990
No comments:
Post a Comment