இனிப் பேசி முடியா..
முறிந்து போன
பேச்சு வார்த்தையை
உறுதி செய்யப்
பேச்சுவார்த்தை
ஓன்று செய்யப் போய்
பேச்சுவார்த்தை
தடித்துவரப்
பேச்சுவார்த்தை
முறிந்து போனது
பேச்சுவார்த்தை
முறிந்ததேன் என ஒரு
பேச்சு வார்த்தை
செய்ய
மறுபடி
முக்கியமாக
ஒரு பேச்சுவார்த்தை
செய்யப் போகிறார்கள்
நமது தலைவர்கள்..
அப்பேச்சு வார்த்தை
நடக்குமாவென
வா
நாமொரு பேச்சு வார்த்தை
செய்வோம்
(1999)
No comments:
Post a Comment