மாவீரர் ~மேஜர் அன்பு| என்கிற
முகம்மது அன்வர் ஞாபகமாக
நம்மூர் நிலா
போர்க்குளத்தினுள் விழுந்து கிடந்த
ஓர் இரவில் என்னிடமிருந்து நீ விடைபெற்றாய்
ஓர் இருட்டில்
சந்திக்க வந்தாய் மறுபடி
ஓரு திருடனைப் போல
அன்வர்| என்றேன்
~அன்வர் இல்லை மேஜர் அன்பு| என்றாய்
உந்தன் தாக விழிகளில் தமிழ்
ஈழ வரைபடம் தெரிந்தது
நம்மூர் நிலாக்கள் வன்னிக்
குளத்தினுள் விழுந்தன
உம்மாவின் விழிகள் கண்ணீர்க்
குளத்தினுள் வாழ்ந்தன
நீ திரும்பி வரவில்லை இதுவரை
தீப்பந்ந்தம் அணைத்து
தீபங்கள் ஏற்றி ஓப்பந்தம் செய்து
ஓப்பங்கள் இடும் இந்நேரம்
உம்மா பாவம் மகிழ்கிறாள்
உன்னைக்கண்டு உச்சிமுகரத் துடிக்கிறாள்
ஈகைச்சுடர் கொழுத்திப் பொங்கும் தமிழரிடையே
தேடுகிறாள் உனக்காக தின்பண்டங்கள்; செய்கிறாள்
மகனே அன்வர் எங்கே மேஜர் அன்பு எங்கே..
அன்பே நீ எங்கே
என்னால் உம்மாவுக்குச் சொல்ல முடியவில்லை
சொல்லவும் போவதில்லை
அஞ்சலிச் சுவரொட்டிகளில் அந்நேரமே நீ
ஓட்டப்பட்டு இருந்ததை
மாவீரர் துயிலிடத்தில் ஓரிடத்தில்
தனியிடத்தில் நீ கவனிக்கப்படாமலும்
~கபனி~டப்படாமலும்
விதைக்கப்பட்டிருப்பதை.
எப்படிச் சொல்ல..?
2000.
No comments:
Post a Comment