Thursday, July 2, 2015

இடது கை இறைவனின் படைப்புகள்

முன்னுரை.

இவை  இடது கை இறைவனின் படைப்புகள் 

 அக்கரைமாணிக்கம்.


நவீன தமிழ்க் கவிதை உலகில்  பழைய மரபுசார் எழுத்துக்கள் கட்டுடைக்கப்பட்டு வருகின்றன.. இதன் உச்சக்கட்டமாக எவரும் எவ்வேளையும் மிக இலகுவாக கவிதை (?) எழுதி விடுகிறார்கள்.. புதியவர்களின் வருகை கவிதைத்துறைக்கு வரவேற்புக்குரியதாக இருந்தாலும் சிலரது எழுத்துக்கள் வாசிக்கக் கூடியவாறு இல்லை என்பது உண்மை. காதலும் பாலியலும் தமிழச் சினிமாக்களில் மலிந்து கிடப்பது போலவே ஈழத்துக் கவிதையுலகிலும் இந்த வைரஸ் பரவி வருகிறது.

ஈழத்துக் கவிதையுலகு தரமும் காத்திரமுமிக்க பங்களிப்பை உடையது. தமிழிலக்கியத்திற்கு  போர்க்கால இலக்கியம் புலம் பெயர் இலக்கியம் என இரு பெரிய புதுப்பாதைகளை அமைத்துக் கொடுத்தது. அப்பாதைகளில் சென்று அதிநவீன கவிதைகள் படைத்துச் சிறப்புற்றோர் பலர்.  அதை விடுத்து மலினச் சரக்குளைக் கையாண்டு கவிதை என்ற பேரால் சண்டித்தனம் செய்வோர் சிலருண்டு.
     
மரபைப் பற்றிய பிரக்ஞை இல்லாமல் அது பற்றிய சொற்ப அறிவு கூட இல்லாமல் நவீன கவிதை படைக்க முடியமென நினைப்பது ஒரு ஆரோக்கியமான விடயமல்ல.. பரந்துபட்ட வாசிப்புத்தான் பண்பட்ட படைப்புகளை உருவாக்க முடியும்.

அபாயா என் கறுப்பு வானம் என்ற இக்கவிதைத் தொகுதியை தந்திருக்கும் தீரன். ஆர். எம். நௌஸாத் 1983களில்  தூது என்ற கவிதைச் சிற்றிதழ் ஒன்றினை நடத்தியவர். தவிரவும் தென்கிழக்கின் நாவல் தேக்கத்தை உடைத்து அதை உலக அரங்குக்கு கொண்டு சென்ற ஒரு புகழ்பெற்ற  நாவலாசிரியர் மட்டுமன்றி ஒரு நல்ல சிறுகதை எழுத்தாளருமாவார்.  அவர் மரபு-புதுக் கவிதைகளிலும் பரிச்சயமுடையவர்.

      தமிழ்நாடு ~காலச்சுவடு|  இதழ் நிறுவுனர் சுந்தர ராமசாமி 75 பவழவிழா இலக்கியப்போட்டியில்  இவர் தனது ~நட்டுமை| நாவலுக்கு முதற் பரிசு வென்றவர். தனது ~வெள்ளிவிரல்| சிறுகதைத் தொகுதிக்கு  2011ல் தேசிய அரச சாகித்திய விருதும் கிழக்கு மாகாண சாகித்திய விருதும் ஒருங்கே பெற்றுக் கொண்டவர்.. 1998ல்  ~தினக்குரல்| நாளிதழும் பிரான்ஸ் தமிழ்வானொலியும் இணைந்து நடத்திய சில்லையூர் செல்வராசன் ஞாபகார்த்த உலக வானொலி நாடகப் போட்டியில் ~காகித உறவுகள்| என்ற தனது வானொலி நாடகத்திற்கு 3ம் பரிசு பெற்றவர்.  இவரது ~நல்லதொரு துரோகம்|  என்ற சிறுகதைக்கு பேராதனை பல்கலைக் கழக தமிழ்சங்கம்  முதற்பரிசாக தங்கப் பதக்கம் அளித்தது..        அத்துடன்ää இவரது ~சாகும்-தலம்.| சிறுகதை தமிழ்நாடு எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை நிறுவனம் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றது.. அபாயா- என் கறுப்பு வானம் என்ற இக்கவிதை நூல் இவரது ஐந்தாவது நூல் ஆகும்.

தீரன்; என்னோடு சிலகாலம் ஒன்றாக ஒரே திணைக்களத்தில் கடமை செய்தவர். அவரை எனக்கு மிக நன்றாகத் தெரியும்.. இடது கையால் எழுதும் பழக்கம் கொண்டவர். மனமுவந்து பழகுவதில் சிறந்தவர். நகைச்சுவை அவருக்கு ஒரு இயல்பான விடயம். இலகுதமிழ் அவருக்கு கைவந்த கலை.

தான் படைத்த நூற்றுக்கணக்கான கவிதைகளில் மிகச் சிலவற்றையே இந்நூல்வாயிலாகத் தந்துள்ளார்.  அதிலும் குறும்பா- வெண்பா- ஹைக்கூ-விருத்தம-புதுக்கவிதைகள்;- காவியம் என்று பல்சுவைக் கதம்பமாக இதை ஆக்கியுள்ளார்.

அவரது மரபுசார் கவிதைகளில் பல இலக்கண வழுக்கள் இருந்த போதிலும் அது வாசிப்புக்கு ஒரு தடையாக இருக்கவில்லை.. அவர் மரபு புது வடிவங்களில் இந்நூலில் சில இடங்களில் புயலாக வீசியிருக்கிறார். சில இடங்களில் ஒரு தென்றலாக வருடியிருக்கிறார்.  ஒவ்வொன்றாக நான் எடுத்துச் சொல்வதை விட வாசகர் நீங்களே  இதை நேரிடையாக அனுபவிக்க முடியும்.... இத்தொகுதியை வாசித்த பின் என் இந்தக் கருத்தோடு உடன்படுவீர்கள் என்பது திண்ணம்.

நூலாசிரியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. 

கலா”ஷணம். அருட்கவிஞர் அக்கரைமாணிக்கம்.
பாண்டிருப்பு.

சமர்ப்பணம்


சமர்ப்பணம்.





கல்முனை புகவம் தலைவர்
கவிஞர். எஸ்.எம்.எம். றாபிக்.

கல்முனை புகவம் பொருளாளர்
ஏ.எல். கபூர்

ஆகியோருக்கு.

செல்பேசி--- நில்லா நிலா (சிறுவர் இலக்கியம்)

செல்பேசி 


செல்பேசி

மணியடிக்குது ஒரு கருவி
மனிதருக்கு வருது செய்தி
ஒலியெழுப் பும்அக் கருவி
உடனுக்குடன் பேசுது விரும்பி

செல்லு மிடமெல்லாம் செய்தி
செல்லிடப் பேசி ஒரு கருவி
அனுப்பிடும் பலகுறுஞ்செய்தி
அனுப்புநர் முகம் காணும் வசதி.

ஆகாய அலைகளில் ஊடுருவி
       ஆட்களை அடைந்திடும் கதிரருவி
  கையடங்கிக் கதைத்திடும் கருவி
   காதுகளில் சினுங்கிடும் கதைக்குருவி.

   (2000)







நில்லா நிலா 



நில்லா  நிலா



நிலா நிலா
நில்லாமல் நீ எங்கே செல்லுகிறாய்..?p

”மியினைச் சுற்றிவரப் போகிறேன்
புதுமைகளைக் கண்டுவரப் போகின்றேன்.

நிலா நிலா
நில்லாமல் நீ எங்கே செல்லுகிறாய்..?p

சூரியனைச் சுழன்று வரப் போகின்றேன்
சோளர்களை எண்ணி வரப் போகின்றேன்

நிலா நிலா
நில்லாமல் நீ எங்கே செல்லுகிறாய்..?p

கிரகங்களைக் கண்டுவரப் போகின்றேன்
கிரமமான பாதையிலே போகின்றேன்

நிலா நிலா
நில்லாமல் நீ எங்கே செல்லுகிறாய்..?p

பால்வீதியைப் பார்த்துவரப் போகின்றேன்
வால்வெள்ளியை வாங்கிவரப் போகின்றேன்

நிலா நிலா
நில்லாமல் நீ எங்கே செல்லுகிறாய்..?p

வண்ணமான வானவில்லில் வளையல் செய்து
 வடிவான பிள்ளை உனக்குத் தரப் போகின்றேன்
          (2000)

கணினி -(சிறுவர் இலக்கியம்)


கணினி




ஒளிரும் திரையில் ஓருலகம்
மிளிரும் கணினி பயில்வோம்
தெளிவுறு உருவினில் தெரியவரும்
அகிலத்தின் ரகசியம் அறிவோம்.


விரிந்திடும் வையக வலையிலே
வியப்புறு செய்திகள் வரைவோம்
தெரிந்திடும் இணையத் தளத்திலே
உலவியே தகவல்கள் அறிவோம்


மென்பொருள் வன்பொருள் தெரிவோம்
கண்ணுரு அய்க்கண்; காண்போம்.
சுட்டியின் அசைவிலே அகிலத்தை
சுற்றியே வருவோம் சுட்டிகளே..
(2000)



விண்வெளி - (சிறுவர் இலக்கியம்)

விண்வெளி
 



விண்வெளி


பரந்து விரிந்த விண்வெளியே - உன்னில்
பொதிந்திருக்கும் புதுமைகள்தாம் என்னே .

எண்ணற்ற கோள்கள் மிதப்பதுவும்
எங்ஙணும் அவையெல்லாம் தொங்குவதும்
கண்ணற்ற விண்மீன்கள் நீந்துவதும்
கவினுறும் காட்சிகளாய்த் தெரிவதுவும்

பால்வீதி பலகாதம் பாய்வதுவும்
பகலிரவு மாறிமாறிச் சுழல்வதுவும்
நீள்வெளியாய் வானம் விரிவதுவும்
நிலமெலாம் மழையருவி பொழிவதுவும்

கோடிமின்னல் பளிச்சிட்டு முழங்குவதும்
குவலயத்தை பேரிடிகள் குலுக்குவதும்
மூடிவரும் மேகங்கள் கலைவதுவும்
முதலொளி எங்ஙனுமே
 பரவுவதும்..

பரந்து விரிந்த விண்வெளியே - உன்னில்
பொதிந்திருக்கும் புதுமைகள்தாம் என்னே ..
(2000)


ஹைக்கூகள் சில....

ஹைக்கூ- 
நகப்பொட்டில்நவபிரபஞ்சம் 



சின்ன விருட்சம்
இறைநேசரின் நிஷ்டை.
தலையில் சிட்டுக்கள்; கூடு..
        0

இருட்டுவழித் தோழர்
குருடனுக்கு வெளிச்சம் ஏன்
கல்லறையில் மின்மினி
        0

வாழ்த்துக்கள் நண்பா
உனக்கென வாங்கிய புதுப்பாதணி
கைகளில் ஊண்றுகோல்.
        0

தகர டப்பா நிறைந்தது
வயிறு நிறைந்து பசி தீர்ந்தது
இன்று பெய்த மழை..
        0

பனித்துளியில் உவரா...
பருகாது பறக்கும் வண்டே
கன்னத்தில் கண்ணீர்.
        0

மேலே சுண்டி விட
கீழே வரவில்லை நாணயம்
”ரணை தினம்.
        0

படுக்கையறை இரகசியம்
பகிரங்கத்தில்
மணிக்கூட்டில் பன்னிரண்டு மணி.
        0

திறக்கத் திசைகள் தேடி
தினமும் அலையும்
சிவனின் நெற்றிக் கண்.
        000