Thursday, July 2, 2015

விண்வெளி - (சிறுவர் இலக்கியம்)

விண்வெளி
 



விண்வெளி


பரந்து விரிந்த விண்வெளியே - உன்னில்
பொதிந்திருக்கும் புதுமைகள்தாம் என்னே .

எண்ணற்ற கோள்கள் மிதப்பதுவும்
எங்ஙணும் அவையெல்லாம் தொங்குவதும்
கண்ணற்ற விண்மீன்கள் நீந்துவதும்
கவினுறும் காட்சிகளாய்த் தெரிவதுவும்

பால்வீதி பலகாதம் பாய்வதுவும்
பகலிரவு மாறிமாறிச் சுழல்வதுவும்
நீள்வெளியாய் வானம் விரிவதுவும்
நிலமெலாம் மழையருவி பொழிவதுவும்

கோடிமின்னல் பளிச்சிட்டு முழங்குவதும்
குவலயத்தை பேரிடிகள் குலுக்குவதும்
மூடிவரும் மேகங்கள் கலைவதுவும்
முதலொளி எங்ஙனுமே
 பரவுவதும்..

பரந்து விரிந்த விண்வெளியே - உன்னில்
பொதிந்திருக்கும் புதுமைகள்தாம் என்னே ..
(2000)


No comments:

Post a Comment