பிறவித் தவம்
பெருநதிப் பரப்பில் சிறு இலை மீதில்
ஒரு எறும்பு
ஒரு துடுப்பின்றி
நதி கடக்க எத்தனம்
நகர் தேடி நகர் தேடி
நகர்கின்ற முயற்சி
ஊர் வீதியில்;
ஒரு நறுமணத் தேவதை
மஞ்சம் தொட அழைக்க-
மகிழ்வுறும் எறும்பு
நாகங்களை மறந்து..
ஆயின்-
சிறுபடகோடும் சிறுநகர் வணிகரோ
பெருநதிப் பரப்பில்
சிறு இலை மீதில்
ஒரு துடுப்பின்றிச் - சென்ற
சிறு எறும்பின்
தலைவிதி எழுதிட
நெடுவொரு நாளில்
ஓரு இறை ஞானம்
தருமறைபொருள் விளங்க
இலைச் சிறு எறும்பு
இறையடி சேரும்.
1989.
No comments:
Post a Comment