
வியத்தகு மனிதர்
பீஏ மஜீது.
எல்லா ஆத’மாவும்
ஏற்றல் இயல்பு மரணத்தை.
பறந்து விட அவரது ஆத’மா
பழுதான இயந்திரத்தைக்
கழுவிடுங்கள்..கட்டழகைக்
கட்டிலிலே வைத்திடுங்கள்.
முடிதரித்தாண்ட மன்னவரின்
அடிகழுவி வைத்திடுங்கள்
றிபன் கிழித்துக் கைவாய் கட்டி
கபன் தரித்துக்
காட்டிடுங்கள் அவர் அழகை.
களனியிலிருந்து கணினிவரை
தந்தூக்குவித்தவரின்
சந்தூக்கைத் தூக்கிடுங்கள்
சடுதியாக-
சம்மாந்துறையின் சரித்திரத்தைச்
சுமந்து செல்லுங்கள்.
நன்னீர் தந்தவரின் கபுறடியில்
பன்னீரைத் தூவிடுங்கள் - ஏழைகள்
கண்ணீர் துடைத்த மன்னவரின்
கபுர்மண்ணைக் கூட்டிடுங்கள்
மின்சாரம் தந்தவருக்கு
மீசானை ஊன்றிடுங்கள்
சோறு தந்த
சேறுபடாச் செல்வனுக்கு
சோபனங்கள் சொல்லிடுங்கள்.
கண்ணுக்குள்ளே வாழ்ந்தவரை
மண்ணுக்குள் மறையுங்கள்.
நிரந்தரமாய் நம்
கல்புக்குள் வாழ்வதற்கு
கபுறுக்குள் வைத்திடுங்கள்...இறை
கருணைக்கு இறைஞ்சிடுங்கள்.
2011
(பாவலரின் காட்டுங்கள் என் சிரிப்பை கவிதையைத் தழுவியது)
No comments:
Post a Comment