Thursday, July 2, 2015

பிணைக்கப்பட்ட இரு காற் பெரு விரல்கள்

பிணைக்கப்பட்ட இரு காற்பெருவிரல்கள் 



நெடும்பாலை
நெற்றியில் ஒருகைவைத்து
தொடுவானத்தில் பார்வை

நிழலின் தலையை மிதிக்க
ஓடும் பாதங்கள் ஓரு(க்) காலும் நடக்கா
வயதுச் சுமை அழுத்த
முதல் வெள்ளி விழுதை முப்பதில் இறக்க

பற்று(ம்) கோல் தேடி பரிதவிக்கும் கைகளுக்கு
ஆத்மீக ஊண்றுகோல் எந்தக் கடையில்..

நிலம் புணர்ந்த
நடை புதைந்து இறுதியாய்ää
மூன்றாவது விழிகளுக்கு
பிணைக்கப்பட்ட
இரு காற் பெருவிரல்களும் தெரிகையில்..?

அதனிலும் கீழே
வாழ்க்கை தெரியும்
1990.


No comments:

Post a Comment