Thursday, July 2, 2015

அபாபீல்களின் அணுத் துகள்கள்

அபாபீல்களின் அணுத் துகள்.


சிங்கத்தின்
பிடரிமயிர் பிடுங்கி  என்
சின்ன மகனிடம் கொடுத்தேன்
இகழ்ந்து சிரித்தான்

புலிநகம் பதித்தொரு
புதுமாலை சமைத்தென்
புத்திரிக்களித்தேன்
பரிகசித்தாள்

வேழப்படையழிக்க
வேண்டும் வழியென்னப்பா
எனக் கேட்க
விழி பிதுங்கினேன்

ஐயோ வாப்பா-
அலகுகளில்
அணுத்துகள்;~ காவி
அகண்ட வானேகி
அன்றொருநாள் அபாபீல்கள்
ஆனைப்படையழித்ததை
அயத்தீர்கள் வாப்பா...

மக்களின் பதிலில்
மமதையழிந்தேன்.
2000

No comments:

Post a Comment