Thursday, July 2, 2015

குறும்பாக சில குறும்பாக்கள்


குறும்பாக சில குறும்பாக்கள் 


01  கருணை

காவி மொட்டை பஸ் ஒன்றில்    ஏறி
கடிந்தார் நான் குரு என்று      கூறி
குருமாருக்கு மட்டுமதில்
குந்தி வந்த முடவனெழ
கருணை அமர்ந்தார் தம்மம்     மீறி.


02  துர்-அதிர்ஷ்டம்

விழுமென்றே நம்பியொரு கோடி
விழுந்தெடுத்தார் லொத்தரைத்தான் நாடி
விழவில்லை ஒருநாளும்
விழாதென்று கிழித்து வீசி
விட்டடெறிந்ததில் இருந்ததிரு கோடி


03  கால்

சீற்றின் கீழ் தன்கால்   விட்டான்
சீற்றின் முன் பெண்கால் தொட்டான்
சோக்காகத்  தடவிவிட்டார்
சேருமிடம் வந்தபின்னே
செயற்கைக்கால்- மிரண்டு விட்டான்.


04  மறி-யல்

விற்க வந்தாள் ஒரு சிறுமி     பிட்டு
வந்தவளைத் தனியறைக்குள்   விட்டு
வளர்த்தாட்டி விளையாடி
வம்புசெய்தார் கிழட்டப்பா
விளக்கமறியலில்; கிழவன்     மாட்டு.


05  சுயநலசரிதை

எத்தனையோ புத்தகங்கள்   போட்டேன்
எவர்தலை கட்டி காசு      சேர்த்தேன்
எவரேனும் நூலொன்று
எழுதியுள்ளேன் எடுங்களென்றால்
என்பணமீந்து வாங்க    மாட்டேன்.


06  ஆ..வேஷம்

தாடிஜிப்h தலைப்பாகை     தொப்பி
ஆடையெல்லாம் அத்தர்     அப்பி
தங்கியிருந்தார் பள்ளித்
தொண்டு; செய்தொரு நாள்
உண்டியலுடன் போனது ஆள் தப்பி


07  இணை-யம்

பிள்ளைக்குப் படிக்க இன்டர்    நெட்டு
”பூட்டினர் கொம்பியுற்றர் கடன்   பட்டு
பேஸ்புக்கில் சட்டடித்து
பாஸ்போட்டும் முடித்தெடுத்து
பறந்தாள் பெற்றோரைக் கை   விட்டு.


08  கிறீஸ்மேன்

எங்கிலுமே கிறீஸ்மேன்தான்   பேச்சு
எல்லோரும் வீடடங்க        ளாச்சு
எத்தனிவன் ஏகலைவன்
ஏறிக் கூரைபிரித்து
எடுத்துச் சென்றான் கோழி   போச்சு


09  தொண்டு

சுனாமியினால் விழுந்தசவம்    கண்டார்
செய்ய வந்தார் புனிதமிகு     தொண்டார்
சவக்குழிகள் தோண்டியவர்
சவம் புதைக்கும் போதந்தச்
செவி கழுத்து நகையுருவிக்   கொண்டார்.


10  குறுஞ்செய்-தீ

எஸ்எம்எஸ் அனுப்புகிறாள்    பாட்டி
எட்டிப் பார்த்தான் பேரன்     சூட்டி
எதிர்வீட்டுக் கிழவருக்காம்
எத்திவைத்தான் பாட்டனிடம்
எழுபது வயதில் மணவிலக்கு    நோட்டீஸ்.


11  புகழ்ச்ச்சீ

இனத்திற்காய் புரிந்த நற்     சேவை
இருக்கையில் புகழ்வதுவே    தேவை
இருக்கையில் மறந்தே போய்
இறந்தபின் புகழ்வோர்சிலர்
இழுத்துப் பிடுங்குஅவர்      நாவை.


12  வாழ்-கை

வாழும்போதே வாழ்த்துவதே     நன்மை
வேண்டுமெனச் சொல்லுகிறோம்  உண்மை
வாழ்கையில் மறந்துவிட்டு
வாழ்ந்தபின்னே சிலை வைத்தே
வணங்குதலை எதிர்த்திடுவோம்  வன்மை.


13  எப்.எம்.

ஹெல்லோ நான்தான் சூப்பர்    எப்எம்
ஹல்லோவ் உங்கள் குரலோ    செப்பம்
ஹீஹீஹீ நலமாண்ணா..?
ஹாய்.. சாப்பிட்டீங்களாம்மா..
ஹீ..ஹீ..அடிச்சேன்ணா ரெண்டு   அப்பம்.


14  மெம்பர்

கிணற்றுத் தவளையவர்       துள்ளி
கணக்கின்றி செலவழித்தார்    அள்ளி
காசுபணம்.. ஆயினுமவர்க்கு
கிடைத்தது ஏழு வோட்டு
கந்தறுந்து போய்ப்படுத்தார்    எள்ளி


15  அன்பு அளிப்பு

அமைச்சில் செயலாளர்   உள்ளார்
அகடம் செய்வதில்       வல்லார்
அவருக்கு அன்பளிப்பு
அகலமான என்வலப்பு
அளித்தால் எக்காரியமும் வெல்வார்.


16  புண்ணியப் பயணம்.

புரட்டிப் பணம் சேர்த்து   வெச்சு
புண்ணியம். புறப்பட்டார்   ஹஜ்ஜ-
பணமிருந்தால் ஹாஜியாராம்
பிணமானால் நேரே சொர்க்கமாம்
பத்துக்குமர் பக்கத்து வீடோ  குச்சு.


17  ஏகமும் நானே

தமிழரின் ஏகதலைவன்      நானே
தரணியெலாம் தனிஆளாய்   தானே
தமிழரசு ஆள்வேனென்று
தலைக்கணம் தழைத்ததால்
தமிழீழப்போர் போனது     வீணே.


18  பாடு-பட்டு.

கனடாவாழ் காதலருக்கும்    பாட்டு
கண்டறியா நேயருக்கும்     கேட்டு
கலகலவென கதைத்திருப்பார்
கலையுலக நண்பர்களாம்
காசுகரையுது கடனுக்கு ரீ   லோட்டு.


19 எம்பி எம்பி

தேர்தலில் குதித்தார்       எம்பி
தேனொழுகப் பேசினார்     தம்பி
தேர்தலில் வென்று
தேவைப்பட்டதைச் சுருட்டி
தேசம்விட்டு நீட்டினார்      கம்பி.


20  நடுநிசிநாய்கள்

நக்குத் தின்னும்         நாய்கள்
நக்கல் பின்னும்         வாய்கள்
நல்லவராய் நடித்து
நண்பரை நயவஞ்சிப்பர்
நரகலைத் தின்னும்      பேய்கள்..


21  பெப்பே

கன்னிக்கும் சேர்த்தெடுத்தார்  டிக்கற்
காசென்று பாராமல்        பொக்கற்
கன்னி பக்கத்தமர்ந்து வரக்
கனவு..கடைசி நிமிடம்
காக்காவுடன் வந்தமர்ந்தாள்  பெப்பற்.


22  தொலைகள்

தொலைபேசி அலுவலகத்தில்     அப்பா
தொலைக்காட்சி நாடகத்தில்     அம்மா
தொலைதூரத்தில் அண்ணா
தொலைநகல் காரனுடள்
தொலைந்து போனாள் மகள்     யம்மா.


23  ஓட்டோ

ரோட்டெல்லாம் ஓடுகின்ற      ஓட்டோ
ராமுழுக்கச் சத்தம்தான்       கேட்டோ
ரம்பமெனக் காதுகளில்
ரொம்பத்தான் அறுத்தாலும்
ரேட்டெல்லாம் குறைந்திடவே    மாட்டா..


24  சீனி-யர்

சீனி கொழுப்பு பிரசர்         கூட
சீனியப்பா கையில்ஊசி       போட
சீக்கிரமே போய்விட்டால்
சிறந்ததடா எனச் சொல்லி
சின்னவீடு சென்றார்          ஆட..


25  யுத்தம் நித்தம்

இறுதியாய் ஓய்ந்தது        யுத்தம்
இல்லை துப்பாக்கிச்        சத்தம்
இனிநிம்மதியே என்றெண்ண-
இந்நாட்டில் வாழ உமக்கு
இடமில்லை என்றார் தேரர்   பௌத்தம்.


26  ஆட்டா-டாட்டா

மகள் பள்ளிக்குச் செல்ல    ஆட்டா
மகள் ரியுசனுக்குப் போகவும் ஆட்டா
மாதமிரண்டு கழிந்திட
முச்சக்கரச் சாரதியுடன்
மகள் காட்டி மறைந்தாள்    டாட்டா..


27  மர்மப் புகழ்;

இவ்விலக்கிய இதழ்தான்     சூப்பர்
இன்சொற் புகல்வார்        டாப்பர்
இதிலொரு விஷயம்
இவ்விதழில் இவர்கவிதை
இருக்கிறதே..அதுதான் பார்  பேப்பர்.


28  ஊவ்..டகங்கள்

ஊடகங்களில்தான் எத்தனை  சேட்டை
உதவாக்கரை களின்புளுகு   மூட்டை
உன்னதமான கருத்தில்லை
உயர் நல் எண்ணமில்லை
உதவாது வீச வேண்டும்     சாட்டை


29  எ.... டிட்டர்

பெண்களின் கவிதைதான்    சுப்பர்
பெண்ணியல் கவிஞர் இந்த   மப்பர்
பத்திரிகையிற் போட்டுடன்
பஸ்ஏறித் தேடிப்;போய்
பல்லிளிக்கும் பேர்வழி எ    டிட்டர்.


30  நூலானார்

புத்தகச்சுச்; செலவுஒரு       பக்கம்
பிரதியனுப்பிய தொகைமறு   பக்கம்
பிரதிகள் ஓசியில் போக
பிரட்டி எடுக்க வழியின்றிப்
போனது கைமோதிரம்       ரொக்கம்.


31  தீ-ரன்

இக்குறும்பாக் களினரசன்     தீரன்
இருக்கின்றேன் சாய்ந்தமரு   தூரன்
இத்தொப்பி யார்க்கெல்லாம்
இணக்கமானால் அணிந்திடுக
இதற்குமேல் பேச்சில்லை     வாரன்.

---------------------------------------------------------------------
எனது மேலும் பல குறும்பாக்களை தூது கவி இதழில் ஆசிரியர் தலையங்கத்தில் காண முடியும் 
றறறவாழழவாரிழநவசiஉளைளரநள.டிடழபளிழவஇஉழஅ 
----------------------------------------------------------------------

No comments:

Post a Comment