Thursday, July 2, 2015

நான் இறந்த தினம்

நான் இறந்த தினம்

அப்துல் கபுர்
உப பொலிஸ் கொஸ்தாப்பல்
இலக்கம் ஆர்.பீஸி.32280

இருபத்தினாலு வயசு
இளமீசை
தீட்சண்யப் பார்வை திகட்டாத நண்பன்

காக்கி உடுப்பின் கசங்கலை
நிமிர்த்தி அணிந்தான்.
காலில்லாத காக்காவுக்காக..

இடையில் தரித்தான்
இடுப்புப் பட்டியை
இன்னும் வாழாத ராத்தாவுக்காக..

வெள்ளி இலக்கத்தை
மார்பில் சூடிக் கொண்டான்..
தள்ளிப் பிறந்த தங்கைகளுக்காக..

எண்ணெய் தடவி
எஸ்ஸெல்லாரை எடுத்தான்.
ஏலாத வாப்பாவுக்காக...

இருபத்திநாலு வயசு
இளமீசை
தீட்சண்யப் பார்வை திகட்டாத நண்பன்
இன்று
திரும்பி வந்தான்
ஒரு மையித்தாக.
1991.



No comments:

Post a Comment