Thursday, July 2, 2015

பிணைக்கப்பட்ட இரு காற் பெரு விரல்கள்

பிணைக்கப்பட்ட இரு காற்பெருவிரல்கள் 



நெடும்பாலை
நெற்றியில் ஒருகைவைத்து
தொடுவானத்தில் பார்வை

நிழலின் தலையை மிதிக்க
ஓடும் பாதங்கள் ஓரு(க்) காலும் நடக்கா
வயதுச் சுமை அழுத்த
முதல் வெள்ளி விழுதை முப்பதில் இறக்க

பற்று(ம்) கோல் தேடி பரிதவிக்கும் கைகளுக்கு
ஆத்மீக ஊண்றுகோல் எந்தக் கடையில்..

நிலம் புணர்ந்த
நடை புதைந்து இறுதியாய்ää
மூன்றாவது விழிகளுக்கு
பிணைக்கப்பட்ட
இரு காற் பெருவிரல்களும் தெரிகையில்..?

அதனிலும் கீழே
வாழ்க்கை தெரியும்
1990.


பிறவித் தவம்

பிறவித் தவம்



பெருநதிப் பரப்பில் சிறு இலை மீதில்
ஒரு எறும்பு


ஒரு துடுப்பின்றி
நதி கடக்க எத்தனம்
நகர் தேடி நகர் தேடி 
நகர்கின்ற முயற்சி


ஊர் வீதியில்;
ஒரு நறுமணத் தேவதை
மஞ்சம் தொட அழைக்க-
மகிழ்வுறும் எறும்பு 
நாகங்களை மறந்து..
ஆயின்-


சிறுபடகோடும் சிறுநகர் வணிகரோ
பெருநதிப் பரப்பில் 
சிறு இலை மீதில்
ஒரு துடுப்பின்றிச் - சென்ற
சிறு எறும்பின் 
தலைவிதி எழுதிட


நெடுவொரு நாளில்
ஓரு இறை ஞானம்
தருமறைபொருள் விளங்க
இலைச் சிறு எறும்பு
இறையடி சேரும்.

1989.

பளீர் --- பதில்

பளீர்

மின்னல்
ஆண்டவனின்
அடையாள அட்டை
  00

   பதில்..?

ரெண்டு வயசு
மகள் கேட்டாள்
வாப்பா
வானம் செவப்பு
அதுக்கு
அறைஞ்சது ஆரு?
                 




சந்-- தூக்குத் தூக்கி

சந்- தூக்குத் தூக்கி;




என்னவாகிலும் செய்.
என் ஜனாசாவை 
குப்பையில் போட்டு எரி

நான் தக்பீர் கட்டிய பின்
பின்புறமாக முதுகில் சுடு.
என் ஹஜ்ஜாஜிகளை
வாகனத்தோடு கடத்திச் செல்.
ஒருவர் மிஞ்சாமல் கொன்று புதைத்து விடு.

ஐரோப்பிய அங்காடியில்
என் இருப்பை மறுதலித்து விடு.
எல்லாம் முடித்து
”மியை ஆண்டு கொண்டிரு நீ

ஆயின்-
உன்
மண்டை பிளக்கப்பட்ட
உடல் உட்பட
வானத்தால் கபனிடப்பட்ட
இந்தப் ”மிச் சந்தூக்கைத்.
தோளில் சுமக்க
இறுதியில் நானே வருவேன்.
(2011)

இனிப் பேசி முடியா

இனிப் பேசி முடியா..



முறிந்து போன 
பேச்சு வார்த்தையை
உறுதி செய்யப் 
பேச்சுவார்த்தை
ஓன்று செய்யப் போய்


பேச்சுவார்த்தை 
தடித்துவரப்
பேச்சுவார்த்தை 
முறிந்து போனது


பேச்சுவார்த்தை 
முறிந்ததேன் என ஒரு
பேச்சு வார்த்தை 
செய்ய
மறுபடி


முக்கியமாக
ஒரு பேச்சுவார்த்தை
செய்யப் போகிறார்கள்
நமது தலைவர்கள்..


அப்பேச்சு வார்த்தை 
நடக்குமாவென 
வா 
நாமொரு பேச்சு வார்த்தை 
செய்வோம் 
(1999)

புத்தரின் பாராளுமன்றம்

புத்தரின் பாராளுமன்றம்


மாதுவிட்டுää மதுவிட்டு
சூதுவாது பேதம் விட்டு
காவியணிந்து போதிமாதவன்
பாதம் சரணமென ஆதி தேடி
அலைந்த அலுப்புத் தீர
அமர்;ந்துகொள்ளவோ
அன்றி

வெளிநாடு பலவுஞ் சென்று
களிநடமாடிடவோ
குளுகுளு இரதங்களேறி
கொழும்புவலம்
வந்திடச்சித்தமோ
ஓலைச் சுவடிகளில் பதிந்து
வேலைவாய்ப்புக்களள்ளி
வழங்கிமிக இன்புறவோ
அன்றிப்

போராடும் குழுக்களையும்
போராளிகளையும் வேரோடழித்து
தம்மினங் காக்கத்
திருமிகவுளம்  கொண்டோ

ஐயனே
கௌதமரின் பையனே
காவிதரித்து விசிறி தாங்கிப்
பாராளுமன்றம் புகுந்தீர்?
2000.
2000.



விளங்காத அகராதி



விளங்காத அகராதி

மகனே
ஆங்கிலம் படி
நீ ஆங்கிலத்தில்
விஸாரிக்கும் போதுதான்
உலகம் உன்னை விஸாரிக்கும்
மகனே- நீ
ஆங்கிலம் படி


                            JVP  LTTE  PLOT

                            TELO  EPRLF  EPDP

                            PIRA  JIHATH  ENDLF

TELA  EROS  TNA  MLO

இவற்றுக்கு
என்ன அப்பா அர்த்தம்ää?

என்னருமை மகனே
ஆங்கிலம் படியாதே...

1990